உங்களுக்கு வந்தா ரத்தம்; எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? பாயின்ட்டை பிடித்த குஷ்பு

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (18:24 IST)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மார்ச் 30 ஆம் தேதி வருமான வரி சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவரது மகன் கதிர் ஆனந்த நடத்தி வரும் கல்லூரியிலும் சோதனை நடந்ததது. 
 
இன்ரு காலை வேலூரில் உள்ள ஒரு தனியார் குடோனில் மூட்டை மூட்டையாக பணம் பரிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் காலை முதல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது. 
 
இவ்வாறு தேர்தலால் தமிழக அரசியல் பரபரப்பான சூழ்நிலையில் உள்ள சமயத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு இந்த விஷயத்தை பற்றி கருத்து தெரிவித்ததொடு, மேலும் ஒரு முக்கியமாக விஷயத்தையும் நினைவு படுத்தியுள்ளார். குஷ்பு கூறியதாவது, 
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தட்டும் பரவாயில்லை. ஆனால், கைப்பற்றின பணத்தை குறித்து தகவல் வெளியிட வேண்டும் அல்லவா. 2 வருடங்களுக்கு முன்னர் கண்டெய்னரில் ரூ.560 கோடி பிடிப்பட்டது. 
 
அதன் பின்னர் அந்த பணம் யாருடையது? எங்கே இருந்து வந்தது? இப்போது அந்த பணத்திற்கு என்ன ஆனது? என எந்த தகவலும் இல்லை. ஏன் இதை மட்டும் மறைக்க வேண்டும்? 
 
உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? மேலும், இது போன்ற விஷயங்களில் தேர்தல் கமி‌ஷன் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்