அனிமல் ஸ்டார் சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’ - வைரல் போஸ்டர்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (13:50 IST)
பணம் இருக்கும் எவரும் சினிமா எடுக்கலாம் என்று ஆகிவிட்ட நிலையில், பல புதுமுகங்கள் சினிமாவிற்கு வருகின்றனர்.


 

 
ஆனால், ரசிகர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே திரைத்துறையில் நீடிக்க முடியும் என்பதால், அப்படி வந்த பலரும் வந்த தடம் தெரியாமல் காணாமல் போய்விடுகின்றனர்.
 
இந்நிலையில், ‘மாட்டுக்கு நான் அடிமை’ என்கிற பெயரில் புதிய படம் உருவாகி வருகிறது. அதற்கான போஸ்டரும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் ‘மாடுகளின் தோழனாய் அனிமல் ஸ்டார் சாம்பார் ராசன் மற்றும் கோலிசோடா புகழ் ஏடிஎம் நாயகி சீதா இணைந்து கலக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு படிமேலே போய் ‘ ரித்திக்ரோஷன் பில்ம் ஃபார்மர்ஸ்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதில், ஹீரோவைப் பார்த்தால் வயதானவராய்த் தெரிகிறது. கோவணத்துடன் அமர்ந்திருக்கும அவர் அருகில் அவருடைய பேத்தி வயது ஹீரோயின் சீதா அமர்ந்திருக்கும் படி போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.  அவருக்கு சீதா மகளாய் நடிக்கிறாரா அல்லது ஹீரோயினாக நடிக்கிறாரா என்பது பின்புதான் தெரியவரும்.
 
இந்த போஸ்டரைக் கண்ட பலரும் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர். இப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
அடுத்த கட்டுரையில்