உச்ச நட்சத்திரத்தை நடிகை சந்தித்தது ஏன்?

Webdunia
சனி, 17 ஜூன் 2017 (16:14 IST)
உச்ச நட்சத்திரத்தை விமர்சித்த நடிகை, அவரை நேரில் எதற்காக சந்தித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.




கடந்த மாதம் தன்னுடைய ரசிகர்களை நேரில் சந்தித்தார் உச்ச நட்சத்திரம். அப்போது பேசிய அவர், ‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாகக் குறிப்பிட்டார். ‘தலைவர் என்பவர் உடனே முடிவெடுக்கும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். வருவேனா, மாட்டேனா என்று வருடக் கணக்கில் முடிவெடுப்பவர் இவர்’ என ட்விட்டரில் கடுமையாகச் சாடியிருந்தார் நடிகை. இதற்கு, உச்ச நட்சத்திரத்தின் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று திடீரென உச்ச நட்சத்திரத்தை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் நடிகை. ‘ரசிகர்கள் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், தான் அந்த நோக்கத்தில் அப்படிச் சொல்லவில்லை’ என்றும் விளக்கம் அளித்தாராம். அத்துடன், அவருடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருக்கிறார் என்கிறார்கள்.
 
அடுத்த கட்டுரையில்