பிரம்மாண்ட படத்தில் நடிக்க, பிரமாண்ட சம்பளம் கேட்ட நடிகை

Webdunia
புதன், 10 மே 2017 (13:32 IST)
பிரமாண்ட படத்தில் நடிக்க, பிரமாண்ட சம்பளம் கேட்டதால் தான் அந்தப் படத்தில் நடிகை நடிக்கவில்லை என்கிறார்கள்.

 
 
சமீபத்தில் வெளியான பிரமாண்ட படம், 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, இன்னமும் கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற, பாக்ஸ் ஆபீஸையே சிதறடித்த படங்களின் வசூலையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது இந்தப் படம். குறிப்பாக, அமெரிக்காவில் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களிலேயே, 100 கோடி  ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது இந்தப் படம்.
 
இந்தப் படத்தில், அனைத்து கதாபாத்திரங்களையும் அடக்கி ஆளும் ராஜமாத சிவகாமி தேவியாக நடித்திருந்தார் ரம்யமான  நடிகை. அவர் நடிப்பே அத்தனை அம்சமாக இருந்தது. ஆனால், இந்த கேரக்டருக்காக முதலில் பேசப்பட்டவர், மும்பையில்  செட்டிலான ‘மயிலு’ நடிகை.
 
படத்தில் நடிக்க சம்மதம் சொன்ன நடிகை, கேட்ட சம்பளமும் அதிகம் என்கிறார்கள். பிரமாண்டமான படம் என்பதால், சம்பளத்தையும் பிரமாண்டமாகக் கேட்டாராம். அத்துடன், படத்தின் லாபத்திலும் பங்கு கேட்க, அடுத்த நிமிடமே அவர் பெயரைப்  பட்டியலில் இருந்து தூக்கிவிட்டார்களாம்.
அடுத்த கட்டுரையில்