பிளேபாய் நடிகருக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா?

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (18:48 IST)
பிளேபாய் நடிகர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தோல்வியைத் தழுவியதால், சோகத்தில் இருக்கிறாராம் நடிகர்.


 

 
சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே செலவழிக்கும் ஒருசில நடிகர்களில், பிளேபாய் முக்கியமானவர். எத்தனைப் படங்கள் எடுத்து தோல்வி அடைந்தாலும், மனம் தளராமல் அடுத்தடுத்து சினிமா தயாரிக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். அதனால் தான் அவருக்குத் தேவையான நேரத்தில் கைகொடுத்து உதவுகிறார்கள் சிலர்.
 
சமீபத்தில், காட்டைப் பற்றிய படத்தில் நடித்திருந்தார் பிளேபாய். பிரம்மாண்டமாக வரப் போகிறது என்று இயக்குநர் சொன்னதை நம்பி, கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தார். ஆனால், படம் தோல்வி அடைந்ததால், தற்போது தெருக்கோடியில் நிற்கிறார்.
 
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் ஹீரோவாக கமிட்டாகியிருந்தார் பிளேபாய் நடிகர். இயக்குநரே தயாரிப்பாளர் என்றாலும், தானும் நட்பு அடிப்படையில் பணம் கொடுத்து உதவுவதாகச் சொன்னாராம் பிளேபாய். ஆனால், அந்தப் படம் தோல்வியால், கையில் நயா பைசா இல்லையாம். இதனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் அப்படியே நிற்கிறது.
அடுத்த கட்டுரையில்