அப்படியாவது பிரச்சனை முடியட்டுமே

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2014 (12:24 IST)
இலங்கையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சேனாதிபதியும், ஆறுபடை இயக்குனரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அவர்களின் படம் இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர்களின் தயாரிப்பு என எதிர்ப்பை சந்தித்துள்ளது. அதனை மாற்ற இது நல்ல சந்தர்ப்பம்.
 
சேனாதிபதி ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன்பே வந்தார் என்றால், இயக்குனரோ இலங்கை அதிபரின் சகோதரர் பெயரை சென்னையின் மூன்றெழுத்து கெட்டவார்த்தையைப் போல் கொஞ்சம் அழுத்தியே உச்சரித்தார். பொதுவாக சாப்டாக இருப்பவர் இப்படி பேச்சில் ஹார்ட்வேராக மாறியது அனைவருக்கும் ஆச்சரியம்தான்.