உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

Siva

ஞாயிறு, 16 ஜூன் 2024 (18:35 IST)
விஜய் சேதுபதி மகன் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் ‘பீனிக்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வரும் நிலையில் சிறையில் நடக்கும் ஒரு கலவரம், சிறையில் உள்ள ஒரு கைதியை கொலை செய்ய வெளியில் இருந்து அனுப்பப்பட்ட அடியாட்கள், அவர்களை சூர்யா காப்பாற்றும் காட்சிகள் என பரபரப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் சிவகார்த்திகேயன் தளபதி எக்ஸ் பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்