கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவாரா ஹீரோ?

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (18:53 IST)
தனக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவாரா ஹீரோ? எனக் காத்திருக்கிறார் இயக்குநர்.




 
சினிமாக்காரர்கள் கொடுத்த வாக்கும், ‘பிக் பாஸ்’ ஜூலியும் ஒண்ணு என்பது ஊரறிந்த விஷயம். எந்த நேரத்திலும், அந்த வாக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனாலும், அந்த வாக்கை நம்பித்தானே வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது.

தளபதி பெயரைக் கொண்ட இயக்குநர், தன் சொந்தக்காசை போட்டு வெற்றி ஹீரோவை வைத்து காடு சம்பந்தப்பட்ட ஒரு படத்தை இயக்கினார். படத்தைப் பார்த்த ஹீரோ மகிழ்ந்து, ‘ஒருவேளை இந்தப் படம் தோற்றால், அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன்’ என வாக்கு தந்தார். அவர் சொன்னதாலோ, என்னவோ… படம் நன்றாக இருந்தும் ஜி.எஸ்.டி., தியேட்டர் ஸ்டிரைக் என போட்ட முதல் வரவில்லையாம். இதனால் வருத்தப்பட்ட இயக்குநர், ஹீரோவிடம் பேசியிருக்கிறார். ‘ஜி.எஸ்.டி. பிரச்னைக்கு நான் என்ன பண்ண முடியும்? படம் நல்லாத்தானே இருந்துச்சு’ என்று சொல்லி கழண்டுகொள்ளப் பார்க்கிறாராம் வெற்றி ஹீரோ. விரைவில் பஞ்சாயத்து கூடலாம் என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்