காணாமல் போன பொருட்களை கண்டுபிடிக்கும் JioTag! – சீப் விலையில் சிறப்பம்சங்கள் இவ்வளவா?

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (12:46 IST)
காணாமல் போன அல்லது மறந்து வைத்து விடும் பொருட்களை ஈஸியாக கண்டுபிடித்து எடுத்துக் கொள்ள உதவும் வகையில் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள JioTag சாதனத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.



பலருக்கு தற்போதைய காலத்தில் ஞாபக மறதி அதிகமாக உள்ள நிலையில் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கார் சாவி, மணி பர்ஸ், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பலவற்றை வைத்து விட்டு காணாமல் தேடுவது சகஜமாகி உள்ளது. இந்த பொருட்களை தேடுவதற்கே தனி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஜியோ தனது புதிய JioTag என்ற சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜியோடேக் ப்ளூடூத் மூலமாக இயங்குகிறது. அடிக்கடி நாம் மறந்துவிடும் சாவி, பர்ஸ் போன்றவற்றில் இதை வைத்துக் கொண்டால் அவற்றை எங்காவது மறந்துவிடும்போது ஸ்மார்ட்போன் மூலமாக அவற்றை ட்ராக் செய்து கண்டுபிடிக்க முடியும்.

அதுபோல ஜியோடேகுடன் இணைந்துள்ள ஸ்மார்ட்போன் காணாமல் போனாலும் இதன்மூலம் கண்டுபிடிக்க முடியும். வீடு, அலுவலகத்திற்குள் 20 மீட்டர் தூரத்திற்கும், வெளிப்பகுதிகளில் 50 மீட்டர் தூரத்திற்கும் இந்த ஜியோ டேக் வேலை செய்யும்.



உதாரணத்திற்கு ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுவிட்டு உங்களது போனை கையில் எடுக்காமல் செல்கிறீர்கள். ஆனால் உங்களது சட்டை பையில் ஜியோ டேக் உள்ளது என்றால் ஸ்மார்ட்போனை விட்டு குறிப்பிட்ட தூரம் விலகும்போதே வைப்ரேட் ஆகி ஒலியெழுப்பி இது அலெர்ட் செய்யும். ஜியோ டேகில் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போனை ரிங் ஆக செய்தும் ஸ்மார்ட்போனின் இருப்பிடத்தை கண்டறியலாம்.

ஒருவேளை ஸ்மார்ட்போன் திருடப்படும் பட்சத்தில் கடைசியாக ஸ்மார்ட்போன் சிக்னல் இழந்த இடத்தின் துல்லியமான லொக்கேஷனையும் இது வழங்கும். அதன் மூலம் ஸ்மார்ட்போனை கண்டறிய உதவுகிறது.

இவ்வாறாக பல நன்மைகளை கொண்ட இந்த ஜியோ டேக் சாதனம் 1 வருட கியாரண்டியுடன் ரூ.749 க்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதே சாதனம் ஆப்பிள் நிறுவனத்தில் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்