வோடாபோனின் அதிரடி பிளான்; தினமும் 2ஜிபி டேட்டா!

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (16:41 IST)
ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக தற்போது வோடாபோன் நிறுவனம் அதிரடியாக புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

 
இலவச வாய்ஸ் கால்களுடன் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கி வந்த நிறுவனங்கள் ஜியோ போட்டியாக தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். தற்போது குறைந்தபட்ச பிளானில் அனைத்து நிறுவனங்களும் தினசரி 1.4 ஜிபி டேட்டா வழங்கி வருகின்றனர். 
 
ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஜியோவுக்கு போட்டியாக தினசரி 2ஜிபி டேட்டா பிளானை அறிமுகம் செய்தனர். ரூ.249க்கு இந்த பிளான் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வோடாபோன் நிறுவனமும் தினசரி 2ஜிபி வழங்கும் பிளானை அறிமுகம் செய்துள்ளது. 
 
ஆனால் வோடாபோன் நிறுவனம் 28 நாட்கள் வெலிடிட்டியுடன் ரூ.255க்கு இந்த பிளானை வழங்குகிறது. இந்த பிளான் தற்போது குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த பிளான் இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்