வங்கி கணக்குகளை தானாகவே இணைத்து கொண்ட ட்ரூ காலர் – அதிர்ச்சியில் பயனாளர்கள்

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (13:53 IST)
ட்ரூ காலர் செயலியை உபயோகிப்பவர்களின் வங்கி கணக்குகளை அனுமதியின்றி ட்ரூ காலருடன் இணைத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்ட்ராய்ட் போன் உபயோகிப்பவர்களுக்கு சில சமயம் தெரியாத நம்பர்களிலிருந்து போன் வரும். அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க உதவும் ஒரு ஆப்தான் ட்ரூகாலர். இந்தியாவெங்கும் இதை பல மில்லியன் மக்கள் உபயோகித்து வருகிறார்கள். சமீபத்தில் ட்ரூகாலர் நிறுவனம் வங்கி கணக்கை இணைத்து ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்யும் யூபிஐ வசதிய்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதில் நிறைய பேர் இணைய ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் ட்ரூகாலரின் அப்டேட் வெர்சன் வெளியானது. அதை அப்டேட் செய்தவர்களின் வங்கி விவரங்கள் தானாகவே ட்ரூகாலர் யூபிஐ செயலியில் இணைந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த ட்ரூகாலர் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட அப்ளிகேசனில் ஏற்பட்ட தொழில்நுட்ப குளறுபடிகளால் இப்படி ஆகி விட்டதாக தெரிவித்துள்ளது. உடனே அந்த அப்டேட் வெர்சனை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளார்கள்.

அனுமதியின்றி வங்கி கணக்குகள் இணைக்கப்பட்ட சம்பவம் ட்ரூகாலர் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்