சாம்சங் புதிதாக வெளியிடும் Samsung Galaxy S2 சிரிஸ் தற்போது ஸ்மார்ட்போன் பயனாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் வேரியண்ட்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.
ஸ்மார்ட்போன் விற்பனையில் பிரபலமாக உள்ள சாம்சங் நிறுவனம் AI தொழில்நுட்பத்துடன் கூடிய தனது புதிய Samsung Galaxy S24 சிரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Samsung Galaxy S24 சிரிஸானது Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus மற்றும் Samsung Galaxy S24 Ultra என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கிறது.
4000 mAh பேட்டரி, 25W வயர் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங்
இந்த Samsung Galaxy S24 மாடல் ஓனிக்ஸ் ப்ளாக், மார்பிள் க்ரே, கோபால்ட் வயலெட், ஆம்பர் யெல்லோவ் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.79,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல் ரூ.89,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Samsung Galaxy S24 Plus ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
4900 mAh பேட்டரி, 45W வயர் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங்
இந்த Samsung Galaxy S24 Plus மாடல் ஓனிக்ஸ் ப்ளாக், மார்பிள் க்ரே, கோபால்ட் வயலெட், ஆம்பர் யெல்லோவ் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.99,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல் ரூ.1,09,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
5000 mAh பேட்டரி, 45W வயர் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங்
இந்த Samsung Galaxy S24 Ultra மாடல் டைட்டானியம் க்ரே, டைட்டானியம் ப்ளாக் மற்றும் டைட்டானியம் வயலெட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.1,29,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடல் ரூ.1,39,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடல் ரூ.1,59,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த Samsung Galaxy S24, Plus, Ultra ஆகிய மாடல்களுக்கான முன்பதிவு சாம்சங் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கியுள்ளது.