ஸியோமி, ஒன் பிளஸ் ஆகிய நிறுவனங்களின் குறிப்பிட்ட செக்போன்களின் அதிக கதிர்விச்சுகளை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுசம்பந்தமான ஜெர்மன் கதிர்வீச்சு பாதுகாப்பு அலுவலகம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் வெளியாகும் கதிச்வீச்சில் ஒரு கிலோவுக்கு எத்தனை வாட்ஸ் உள்ளது என்பது பரிசோதிக்கப்பட்டது.
அதனடிப்படையில் அதிகளவு கதிர்வீச்சுக்களை வெளியிடும் முதல் ஐந்து செல்போன்கள் பட்டியலில் ஸியோமி , ஒன் பிளஸ் நிறுவனத்தின் 4 செல்போன்கள் இடம் பெற்றுள்ளதாகவும் , இதில் ஸ்யோமி mi A1 தான் மிக அதிக கதிர்வீச்சுக்களை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அடுத்த இடங்களில் ஒன் பிளஸ் 5டி, ஸியோமி எம் மேக்ஸ் 3, மற்றும் ஒன் பிளஸ் 6 டி, ஆகிய செல்போன்கள் எல்லாம் அதிகக் கதிர்வீச்சுக்களை வெளியிடும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.