ஒன்ப்ளஸ் பல மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தனது முதல் மடிக்கும் வகை ஸ்மார்ட்போனான OnePlus Openஐ வெளியிடுகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று ஒன்ப்ளஸ். அதிநவீன கேமராக்கள், தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் கொண்ட பல ஸ்மார்ட்போன் மாடல்களை இதுவரை ஒன்ப்ளஸ் வெளியிட்டுள்ளது. தற்போது சாம்சங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் மடிக்கக்கூடிய Foldable Smartphone-களை சந்தையில் இறக்கி வரும் நிலையில், அதற்கு போட்டியாக ஒன்ப்ளஸும் தனது புதிய OnePlus Open மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மற்ற ஸ்மார்ட்போன்கள் இருக்கும் அளவிலிருந்து பாதியாக மடித்து வைக்கும் அளவில் உள்ள நிலையில் OnePlus Open இருக்கும் அளவிலிருந்து இரண்டாக விரித்து ஒரு டேப்லெட் அளவு திரை கொண்டதாக வைத்து பயன்படுத்தலாம்.
இந்த OnePlus Open ஸ்மார்ட்போனின் விலை மற்ற நாட்டு விலை நிலவரங்களோடு ஒப்பிடும்போது ரூ.1,39,999 இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஆப்பிள் ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு இணையான விலை என்பது குறிப்பிடத்தக்கது.