இந்தியாவில் தொலைத்தொடர்பு புரட்சி நடந்து என்ன பயன்? வேண்டியது இல்லையே!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2017 (14:11 IST)
சர்வதேச மொபைல் டவுன்லோடு வேகத்தில் இந்தியா 109வது இடத்தில் இருப்பதாக ஊக்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இந்தியாவில் ஜியோ நிறுவனம் 4ஜி குரல் வழி மற்றும் இணையதள செவையை இலவசமாக அறிமுகம் செய்ததன் மூலம் தொலைத்தொடர்பில் புரட்சி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் ஆகியவை 4ஜி சேவையின் கட்டணங்களை குறைக்க தொடங்கியது. 
 
தற்போது ஜியோ நிறுவனம் சலுகை விலையில் கட்டண சேவையை வழங்கி வருகிறது. ஏர்டெல், வோடோபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களும் ஜியோவுக்கு நிகராக போட்டிப்போட்டு சலுகைகளை வழங்கி வருகின்றன.
 
ஜியோ 4ஜி சேவையை இலவசமாக வழங்கியபோது, ஜியோவை விட எங்கள் தொடர்பில்தான் இணையதள வேகம் அதிகமாக உள்ளது என ஏர்டெல் கூறிவந்தது. இதைத்தொடர்ந்து டிராய் வெளியிட்ட அறிக்கையில் ஜியோ நிறுவனம்தான் அதிகளவில் இணையதள வேகம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சர்வதேச இணையதள வேகம் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனமான ஊக்லா தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது. இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் மொபைல் பதிவிறக்கம் வேகத்தில் நவம்பர் 2017 நிலவரப்படி இந்தியா 109வது இடத்தில் உள்ளது.
 
இந்தியாவில் இந்த ஆண்டில் பிராட்பேண்ட் டவுண்லோடு வேகம் 50% அதிகரித்துள்ளது. பிராட்பேண்ட் டவுண்லோடு வேகத்தில் இந்தியா 76வது இடத்தில் உள்ளது. மேலும் இந்திய நிலவரப்படி டேட்டா வேகம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக ஊக்லா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்