இந்தியாவில் உள்ள அரசு தொலைத் தொடர்பு நிர்றுவனமான பி.எஸ்.என்.எல் தற்போது கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், வேகத்தையும், மக்களின் தேவைகளையும் நிறைவேற்ற பல தனியார் முன்னணி தொலைதொடர்பு துறைகள் கவர்ச்சியான திட்டத்தையும், இலவச டால்க்டைம்களையும், குறிப்பிட்ட அளவு இண்டர்நெட் டேட்டாக்களையும் கொடுத்து வருகின்றன. இதில் போட்டியிட முடியாமல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் திணறிவருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஊடகங்களிலும் இதுகுறித்த தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பி.எஸ்,என்.எல் நிறுவனத்தை மூடும் திட்டம் எதுவும் இல்லை என இந்நிறுவனத்தின் தமிழ்நாடு தொடர்பு வட்டம் தலைமை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விளக்கிக் கூறியிருப்பதாவது :
சில ஊடகங்களில், பி.எஸ்.என்.எல். குறித்த தவறான தகவல்கள் உள்நோக்கத்துடன் வெளியாகிவருகின்றது. அதனால் பொதுமக்களிடம் எழுகின்ற அச்சங்களை போக்கும் வகையில் விளக்கங்களை வெளியிடுவது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடும் திட்டம் மத்திய அரசுகு இல்லை. போட்டியின் காரணமாக கட்டண சரிவினால் பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சில மாதங்களாக சந்தித்து வருகிறது. அதிலிருந்து மீட்பதற்கான ஒரு திட்டத்தை ஒரு மத்திய அரசு தயாரித்து மத்திய அமைச்சரவைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் மக்களூக்கு மிகச்சிறந்த தொலை தொடர்பு சேவைகளை வெளிப்படையாக மற்றும் மிககுறைவான கட்டணங்களில் அளித்துவரும். அதனால் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.