3 மாதங்களுக்கு ஜியோ இலவசம்: ஆனா கொஞ்சம் வித்தியாசமா!!

Webdunia
வியாழன், 11 மே 2017 (10:26 IST)
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை அடுத்து ஜியோவின் அடுத்த திட்டம் சார்ந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.


 
 
ஜியோ ஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் திட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சேவையின் சோதனைகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ள நகரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட நகரங்களில் துவங்கும் என தெரிவித்துள்ளது. 
 
சேவை துவங்கிய முதல் 90 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டு அதன் பின் ஒருமுறை கட்டணமாக ரூ.4000 - ரூ.4500 வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கட்டணம் ஜியோ ஃபைபர் ரவுட்டருக்கானது என்றும் இந்த கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
ஜியோ ஃபைபர் கனெக்ஷன்கள் வீட்டு பயன்பாடு மட்டுமின்றி வர்த்தக ரீதியிலான சேவைக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்