ஜடேஜா ஏன்? தோனி விளக்கம் கொடுத்தும் தீராத சோகம்!

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (09:39 IST)
கடைசி ஓவரை ஜடேஜாவுக்கு வழங்கியது ஏன் என தோனி போட்டிக்கு பிந்தைய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். 
 
வழக்கம் போல் வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியை சிஎஸ்கே அணியின் சொதப்பல் ஆட்டம் காரணமாகத்தான் நேற்று தோல்வி அடைந்தது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கடைசி ஓவரை ஜடேஜாவிற்கு கொடுத்தது மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிரது. 
 
இது குறித்து தோனி போட்டிக்கு பிந்தைய பேட்டியில், பிராவோ உடல் தகுதியுடன் இல்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறிய பிராவோ மீண்டும் களத்திற்கு வரவில்லை. இதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என விளக்கம் அளித்தார். 
 
இருப்பினும் அந்த ஓவரில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் மிக எளிதாக இலக்கு எட்டப்பட்டு டெல்லி அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்