IPL 2022: அணிகளிடம் மீதமுள்ள வீரர்களும் பட்ஜெட்டும்!!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (15:22 IST)
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகளில் இதுவரை அணிகள் தேர்ந்தெடுத்த வீரர்கள் மற்றும் மீதமுள்ள தொகை விவரங்களைப் பார்ப்போம்....

 
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. அதற்கான ஏலம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடக்கின்றன.
 
இந்நிலையில் ஏலத்தை நடத்திக் கொண்டிருந்த ஹக் மெடேஸ் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனால் ஏலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ஏலம் 3.30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. 
 
இதனிடையே இதுவரை அணிகள் தேர்ந்தெடுத்த வீரர்கள் மற்றும் மீதமுள்ள தொகை விவரங்களைப் பார்ப்போம்... 
 
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, மீதமுள்ள பட்ஜெட்: 41.6 கோடி
 
டெல்லி கேப்பிடல்ஸ்: டேவிட் வார்னர், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, மீதமுள்ள பட்ஜெட்: 41.25 கோடி
 
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில், ஜேசன் ராய், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், முகமது ஷமி, மீதமுள்ள பட்ஜெட்: 43.75 கோடி
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, மீதமுள்ள பட்ஜெட்: 20.5 கோடி
 
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கே.எல்.ராகுல், குயின்டன் டி காக், மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், ரவி பிஷ்னோய், மீதமுள்ள பட்ஜெட்: 33.15 கோடி. 
 
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா,  மீதமுள்ள பட்ஜெட்: 48 கோடி. 
 
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான், மயங்க் அகர்வால், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், மீதமுள்ள பட்ஜெட்: 54.5 கோடி. 
 
ராஜஸ்தான் ராயல்ஸ்: தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட், மீதமுள்ள பட்ஜெட்: 32.75 கோடி. 
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், மீதமுள்ள பட்ஜெட்: 39.25 கோடி. 
 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன், அப்துல் சமத், உம்ரான் மாலிக், மீதமுள்ள பட்ஜெட்: 68 கோடி. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்