டிவில்லியர்ஸின் நடு ஸ்டெம்பை பறக்கவிட்ட நடராஜன்… கோலியின் கவனத்துக்கு!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (10:45 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் முக்கியமானக் கட்டத்தில் ஏபி டிவில்லியர்ஸின் விக்கெட்டை கைப்பற்றினார்.

நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசி 131 ரன்களுக்கு பெங்களூர் அணியைக் கட்டுப்படுத்தினர். இதில் முக்கியமானக் கட்டத்தில் ஏபிடிவில்லியர்ஸின் விக்கெட்டை எடுத்தார் நடராஜன்.

மிஸ்டர் 360 என வர்ணிக்கப்படும் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களை எல்லாம் எல்லாத் திசைகளிலும் பறக்கவிட்ட டிவில்லியர்ஸை நடு ஸ்டெம்பை பறக்கவிட்டு விக்கெட் எடுத்தார் நடராஜன். அது போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் சமூகவலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் நடராஜனின் பந்துவீச்சு திறமையைப் பார்த்து கேப்டன் கோலி அவரை இந்திய அணிக்கு கொண்டுவருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்