டெட்லைன் கணக்கு எனக்கு 11 ஆவது ஓவரில்தான் சொல்லப்பட்டது! கோலி ஆசுவாசம்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (17:20 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று விளையாடிய டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய இரு அணிகளுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

நேற்று நடந்த டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும் தோல்வி அடைந்த பெங்களூரு அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டம் ஆரம்பிக்கும் முன் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும் என்ற நிலை இருந்தது. ஆனால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்த 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. 153 ரன்கள் என்ற இலக்கை 17.3 ஓவர்களுக்குள் டெல்லி அணி எடுத்தால் கொல்கத்தா தகுதி பெற்று விடும் என்றும் பெங்களூரு வெளியேறி விடும் என்றும் கால்குலேஷன் செய்யப்பட்டது.

ஆனால் இந்த தகவல் தனக்கு 11 ஆவது ஓவரில்தான் சொல்லப்பட்டதாம். அதனால் வெற்றி கைவிட்டு போனபோதும் நடு ஓவர்களில் நம்பிக்கையுடன் பந்துவீசினோம் எனக் கோலி கூறியுள்ளார்.  மேலும் ‘பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறோம். முதல் இரண்டு இடங்களை பிடித்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பிளே அஃப்க்கு செல்ல போதுமான ஆட்டத்த வெளிப்படுத்தியுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்