ஐபிஎல்2017 - நான் டெஸ்ட் வீரர் இல்லை; சதம் அடித்த ஆம்லா

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (21:59 IST)
ஐபிஎல் 10வது சீசனில் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் ஆம்லா இன்று மும்பை அணிக்கு எதிராக போட்டியில் அதிரடியாக் ஆடி சதம் அடித்தார்.


 

 
ஐபிஎல் 10வது சீசனில் நடைப்பெற்றுவரும் லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வந்தது. ஆம்லா 60 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் குவித்தார். இந்த ஐபிஎல் சீசனில் இது அவரது இரண்டாவது சதமாகும். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை விளையாடி வருகிறது.
அடுத்த கட்டுரையில்