தாறுமாறாக கேள்வி கேட்ட பீட்டர்சன்: தல தோனியின் கூல் பதில்!!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (12:26 IST)
மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது தாறுமாறாக கேள்வி கேட்ட பீட்டர்சன் வாய்க்கு தோனி சரியான பூட்டு போட்டார்.


 
 
இந்தியாவில் உள்ளூர் டி 20 தொடரான இந்தியன் பிரிமியர் லீக் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடரின் இரண்டாவது போட்டியில் மும்பை, புனே அணிகள் மோதின.
 
இதில் டாஸ் வென்ற புனே கேப்டன் ஸ்மித் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி முதல் முறையாக கேப்டன் பொறுப்பில் இல்லாமல் களமிறங்கினார்.
 
இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் வர்ணனையாளராக இருந்தார். இவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மனோஜ் திவாரியை, தோனியிடம் யார் சிறந்த கோல்ப் வீரர் என கேட்கும்படி சொல்ல அவரும் கேட்டார்.
 
இதற்கு தோனி, நீ தான் எனது முதல் டெஸ்ட் விக்கெட், அதை எப்போதும் மறக்க வேண்டாம் என தனது கூலான ஸ்டைலில் பதிலளித்தார். இது பீட்டர்சனுக்கு தக்க பதிலடியாக இருந்தது.

 
அடுத்த கட்டுரையில்