கேரளாவின் ஸ்பெஷல் உணவான சக்கவரட்டி, தமிழ்நாட்டில் பலாப்பழ அல்வா என்று கூறுவதுண்டு, மிகவும் அருமையான சுவை கொண்ட இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:
பலாச்சுளைகள் - 20
வெல்லம் - 200 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் - 100 மி.லி.
செய்முறை:
சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும்.