ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழிகள்

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (00:22 IST)
ஆண்மைக் குறைவினால் பலரும் பாதிக்கபடுகிறார்கள். இதனால் கணவன், மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது. ஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழி முறைகளை சித்தர்கள் வகுத்து அளித்துள்ளனர். இவற்றுக்கான உணவுகள் மற்றும்  மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது.
 
“நறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை,
வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என
 
விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம்
பின் வாங்கிக் கேள்”
 
“நறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும். நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை அடுத்து தூதுவளை, பசலை கீரை, அரைக்கீரை”, இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
தாளிக்கீரை என்பது வேலிகள், சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் கொடியினம்.  உடல் கொதிப்பு, எரிச்சல் போக்கும். காமம் பெருக்கும் வல்லமை படைத்தது. இதில் இலை மட்டுமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. உள் உறுப்புகளில் ஏற்படும் புண், அழற்சி, வாய்ப்புண், சிறு நீர்ப் பாதையில் தோன்றும்  நோய்கள், விந்தணு குறைபாடு போன்றவை காணாமல் போகும்.
 
தாளிக்கீரையின் இலையை அரைத்து தினந்தோறும் உடலில் தலை முதல் கால்வரை தேய்த்து குளித்து வர உடல் அரிப்பு நீங்கும் தோல் நோய்கள் அணுகாது.  சருமம் பளபளப்பு அடையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்