முகத்தில் காபிக்கொட்டை ஃபேஸ்பேக் !!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (23:52 IST)
காபிக் கொட்டை ஃபேஸ்பேக் ஆனது முகத்தின் அழகினைக் கூட்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இது வறட்சி, சிவப்பழகு போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
 
முகத்திற்கு ஸ்கரப்பாக காபி தூளை பயன்படுத்தலாம். இது முகத்திற்கு கெமிக்கல்கள் கலந்த ஸ்கரப்பை போல கெடுதல் விளைவிக்காது. காபி பொடியில் சிறிதளவு சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.
 
காபி தூள், முல்தானி மெட்டி, கற்றாழை ஜெல் உள்ளிட்டவற்றை கலந்து கொள்ள வேண்டும்.  இதனை ஒருநாள் விட்டு முகத்தில் ஸ்கரப் செய்து கழுவி வர சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீங்கி புத்துணர்ச்சியாக இருக்கும். 
 
அரை கப் காபி தூளை, சிறிதளவு பால் சேர்த்து கெட்டியான பசையாக்கி கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள்ஸ்கரப் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர இறந்த செல்கள் நீங்கி பிரகாசமான முகம் பளிச்சிடும்.
 
தேவையானவை: காபிக் கொட்டை 10, ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன், கற்றாழை ஜெல் 3 ஸ்பூன், நல்லெண்ணெய் 1 ஸ்பூன்.
 
செய்முறை: காஃபிக் கொட்டையினை லேசாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அடுத்து காஃபித் தூளுடன் ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இப்போது காபிக் கொட்டை ஃபேஸ்பேக் தயார்.
 
இந்த காபிக் கொட்டை ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும், மேலும் முகத்தைக் குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும். முகம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்பது உறுதி. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்