டாம் க்ரூஸ் உருவாக்கும் கொரோனா ஃப்ரீ நகரம்! எல்லாம் ஒரேயொரு படத்துக்காக!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (12:04 IST)
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் திரைப்பட பணிகள் முடங்கியுள்ள நிலையில் ஒரு புதிய நகரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்.

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் ஹீரோக்களில் முக்கியமானவர் டாம் க்ரூஸ். இவர் நடித்து வெளியாகும் ‘மிஷன் இம்பாஸிபிள்’ பட வரிசைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை. மிஷன் இம்பாஸிபிள் படத்தின் ஆறாம் பாகம் 2018ம் ஆண்டு வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் மிஷன் இம்பாஸிபிள் ஏழாம் பாகம் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.

இந்த படத்தை டாம் க்ரூஸ் தயாரித்து, நடித்தும் வருவதால் படப்பிடிப்பு பணிகளை தொடர புதிய வழியை மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட்ஷயர் மாகாணத்தின் ராயல் விமானப்படை தளத்தை தற்காலிக படப்பிடிப்பு தளமாக மாற்ற உள்ளார் டாம் க்ரூஸ்.

படப்பிடிப்புகளுக்கு தேவையான அரங்க அமைப்புகள் உருவாக்கப்படும் அதே சமயம், டாம் க்ரூஸ் உள்ளிட்ட அனைத்து திரைப்பட ஊழியர்களும் அங்கேயே தங்குவதற்கு அறைகளும் ஏற்பாடாகி வருகிறது. பலத்த மருத்துவ பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா இல்லாத நகரமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து நவம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள், இந்த தற்காலிக படப்பிடிப்பு தளத்தை அமைக்க டாம் க்ரூஸ் 600 கோடி செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்