இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடக்கூடிய இடங்கள் பற்றி பார்ப்போம்...!!

Webdunia
இந்திய மக்கள் விரும்புகின்ற பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை ஆகும். இந்த ஹோலி பண்டிகை கொண்டாடுகின்ற நேரங்களில் ஒவ்வொரு தெருக்களிலும்  வானவில் வண்ணங்களாக காட்சியளிக்கும். ஒவ்வொரு இடங்களிலும் இப்பண்டிகை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். 

மதுரா: மதுராவில் ஹோலி பண்டிகையின் சிறப்பம்சம் என்னவென்றால் நிறங்களுக்கு பதிலாக குச்சிகளை கொண்டு நடனமாடி, வரவேற்பார்கள். இப்பண்டிகையை லத்மர் ஹோலி என்றும் அழைப்பர்.
 
மேற்கு வங்காளம்: மேற்குவங்காளத்தில் உள்ள புருலியா என்ற இடத்தில் வண்ணப்பொடிகளுடன் மற்றும் பாரம்பரியமிக்க சௌ நடனத்துடனும் ஹோலி பண்டிகை  கொண்டாடி வருகின்றனர்.
 
பஞ்சாப்: பஞ்சாப்பில் உள்ள அனந்தப்பூர் சாகிப் என்ற இடத்தில் வண்ணங்களுடன் மட்டுமல்லாமல் அதிகப் படியான உடல் செயல்பாடுகளால் ஹோலிப்பண்டிகை  கொண்டாடப்படுகிறது. 
 
ராஜஸ்தான்: ஜெய்ப்பூரில் ஹோலி பண்டிகையானது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியில் வண்ணநிற  ஆடைகளுடனும், அழகாக அலங்கரீக்கப்பட்ட யானைகள் நிறைந்து இருக்கும். மற்றும் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெறும்.
 
கோவா: கோவாவில் இப்பண்டிகையை சிக்மோ என்றழைப்பர். இங்கு இந்த பண்டிகை கொண்டாடத்துடன் இசை மேளம் மற்றும் படை அணிவகுப்புகளும் இரவுநேர கேளிக்கை இசைகளும் கேளிக்கைகளுடன் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
 
மத்தியபிரதேசம்: இந்தூர் - மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் போது நமது இதயமே நடனம் ஆடும். முழு நகரமே ஒரே இடத்தில் ஒன்றுகூடி கொண்டாடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்