ஹோலி பண்டிகையின் போது வண்ணப் பொடிகளை தூவி நன்கு சந்தோஷமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விளையாடிருப்போம். ஆனால் அவ்வாறு தூவி விளையாடும்போது சருமத்தில் படும் வண்ணப் பொடிகளில் உள்ள வண்ணங்களைப் போக்குவது என்பது மிகவும் கடினமானது. மேலும் இந்த பொடிகளினால் நிறைய சருமப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஹோலியின் போது பயன்படுத்தப்படும் வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், நாளடைவில் வியாபாரம் நோக்கத்திற்காக வணிகர்கள் சாயம் கலந்த செயற்கை வண்ணங்களை அதிகமாகப் விற்று வருகின்றனர்.