சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர். தர்மசாஸ்தா அய்யப்பன் 18 தத்துவங்களை கடந்தவராக விளங்குகிறார். அதனால் தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் 5 படிகள் புலன்களை குறிக்கின்றன. அடுத்து வரும் 8 படிகள் அஷ்டமாசித்திகளை அடையாளப்படுத்துகின்றன. 14, 15, 16 ஆம் படிகள் மூன்று குணங்களையும் பிரதிபலிக்கின்றன. 17 ஆம் படி ஞானத்தைக் குறிக்க, 18 ஆம் படி அஞ்ஞானத்தைக் குறிக்கின்றது.
புலன்கள் ஐந்து, பொறிகள் ஐந்து, பிராணங்கள் ஐந்து, மனம் ஒன்று, புத்தி ஒன்று, ஆலங்காரம் ஒன்று என மொத்தம் 18 ஆகின்றன. இவற்றை தாண்டி கடவுளை உணர வேண்டும் என்ற ஆழ்ந்த கருத்தின் அடிப்படையிலேயே 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.