கார்த்திகை மாதம் விரைவில் பிறக்க இருக்கும் நிலையில், அந்த மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை போடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் ஐயப்பனுக்கு மாலை போட்டு விட்டால், அவர் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஐயப்பனுக்கு அர்ப்பணித்து தியாக மனப்பான்மையுடன் நடந்து கொள்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
ஒருவர் சபரிமலைக்கு மாலை போடும்போது, இல்லற துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயப்பனுக்கே என்று அர்ப்பணிக்கிறார். மாலை போட்ட பிறகு, "அனைவரும் ஒன்று, ஆத்மாவும் ஒன்று, வேறுபாடு கிடையாது, விருப்பு வெறுப்பு கிடையாது" என்ற மனப்பான்மை ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்படுகிறது. மேலும், "நான், எனது" என்ற பற்றும் மாறுபட்டு போகிறது.
ஐயப்பனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி ஏற்ற வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் இருந்து இருமுடி ஏற்று, ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம்.