திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா: குவிந்த பக்தர்கள்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (20:34 IST)
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றதை அடுத்து பக்தர்கள் குவிந்தனர். 
 
கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலை மற்றும் முருகன் ஆலயங்களில் நடைபெறும் வழக்கமான ஒன்று. அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது
 
கொடியேற்றத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமி தெய்வயானை அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுப்பிரமணியசாமி மற்றும் தெய்வயானைக்கு தினமும் காலை மாலை ஆகிய இரண்டு வேடங்களில் அலங்காரம் செய்யப்படும் என்றும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 5ஆம் தேதி மாலை 7 மணிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் என்றும் டிசம்பர் 6ஆம் தேதி மகாதீபம் ஏற்றப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்