ஆரோக்கியம் பெற தன்வந்திரி அவதரித்த தினத்தில் சிறப்பு வழிபாடு !!

Webdunia
மாத தேய்பிறை 13ம் நாள் தன்வந்திரி அவதரித்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி திரயோதசி அல்லது தன்தேரஸ் என்று அழைக்கப்படுகிறது.

திருப்பாற்கடலைக் கடையும்போது தன்வந்திரி பகவான் அமிர்த கலசத்தோடு அவதரித்தவர். இந்த தினத்தில் ஆரோக்கியம் பெற அவரை உபாசனை செய்வது உத்தமம். நாம் போகியின் போது வீட்டைச் சுத்தப்படுத்துவது போல், தந்தேரஸ் அன்று வீட்டை சுத்தம் செய்து பகவானை வரவேற்க தயாராகும் நாள் இது. 
 
பலர் இன்றைய தினத்தில் தான் "தீபாவளி லேகியம்" செய்வது வழக்கம். தந்தேரஸை தனம் தரும் திரயோதசி என்று கொண்டாடுவதும் உண்டு. அதனால் தந்தேரஸ் அன்று புது நகைகள், புதுப் பொருட்கள் வாங்குவது வழக்கம். 
 
இந்த தந்தேரஸ் அன்று மாலையில் துளசிச்செடி அருகே தீபம் ஏற்றி வழிபடுவர். துர்மரணங்கள் நிகழாமலிருக்க இதைச் செய்வர். இதற்கு யமதீபம் என்று பெயர்.
 
தன்வந்திரி அவதரித்த இந்த நாளை நாம் "ஆரோக்கிய தீபாவளி" என்று கொண்டாடுவோம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்