நவராத்திரி கொலு வைக்க போறீங்களா? அதற்கு முன் இதை படியுங்கள்..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (18:10 IST)
நவராத்திரி திருவிழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நிலையில் பலர் வீடுகளில் கொலு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த கொலுவுக்கான படிகளை அமைப்பதில் சில விதிமுறைகள் உண்டு என்பதை கொலு வைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
 
பொதுவாக கொலு வைக்கும் படிகளை 5, 7, 9 என ஒற்றைப்படையில் தான் அமைக்க வேண்டும். கொலு வைக்கும் முதல் படியில் ஓரறிவு கொண்ட புல் பூண்டு செடி கொடிகள் தாவர வகைகளும் இரண்டாவது படியில்  ஈரறிவு கொண்ட சங்குகள் ஆகியவை இடம்பெற வேண்டும். மூன்றாவது படியில் மூவறிவு கொண்ட எறும்பு கரையான் பொம்மைகள் நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட நன்று வந்து போன்ற உயிரினங்கள் ஐந்தாவது படியில் ஐந்து அறிவு கொண்ட விலங்குகள் ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் வைக்கப்பட வேண்டும்.
 
ஒவ்வொரு படிக்கும்  ஒவ்வொரு அறிவு கொண்ட உயிரினங்கள் வைக்கப்படுவது தான் நவராத்திரி கொலு பொம்மைகள் உள்ள சிறப்பு.  மேலும் ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகள், எட்டாவது படியில் தேவர்கள் மற்றும் தெய்வங்கள் ஒன்பதாவது படியில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் பொம்மைகள் வைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்