108 வைணவத்திற்கு தலங்களில் ஒன்றான இந்த கோவில் பஞ்சரங்க தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பிரம்மதேவனால் வெளிப்பட்ட வேதங்களை அரக்கர்கள் அபகரித்துச் சென்ற நிலையில் பிரம்மா, பெருமாள் இடம் வேண்டினார். அந்த வேதங்களை அரக்கர்களிடமிருந்து பெருமாள் மீட்டு வந்து வேதங்களை கொடுத்ததால் பரிமள ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கோவில் வாசலில் சந்திர புஷ்கரணி உள்ளது. அதில் சந்திரன் இந்த தீர்த்தத்தில் நீராடி தன்னுடைய சாபம் நீங்க பெற்றதாகவும் வரலாறு உண்டு. தவறு செய்தவர்கள், பெண்கள் சாபத்திற்கு உள்ளானவர்கள், பெண் குழந்தை வேண்டுபவர்கள் இந்த ஆலயம் சென்று வழிபாடு செய்தால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும்.