கணபதிக்கும் மிகவும் உகந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் சொல்ல வேண்டிய முக்கிய ஸ்லோகத்தை இங்கு தெரிந்து கொள்வோம். விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
'ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்'
எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
பல வினைகளை போக்கும் சக்தி மிக்க மகா கணபதி மந்திரம்:
சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லுங்கள். காலையும் மாலையும் சொல்லுங்கள். சங்கடஹர சதுர்த்தி நாளில் சொல்லுங்கள். மகத்துவம் நிறைந்த இந்த மந்திரம், உங்கள் மனதையும் புத்தியையும் தெளிவாக்கும். வீட்டில் நல்ல அதிர்வுகள் ஏற்படும்.
ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன்படுத்தி பலனடைய வேண்டும் என்பதை அகத்தியர் விளக்கியுள்ளார்.