கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (19:47 IST)
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான  சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் திருச்செந்தூர் கோவிலில் விசேஷமாக நடைபெற்றது. 
 
 கந்த சஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று ஏழாம் நாள் திருவிழாவில்  தவசு காட்சி மண்டபத்தில் தெய்வானை அம்பாள்  எழுந்தருளினார்.
 
இதனை அடுத்து  வேத மந்திரங்கள் முழங்க  சுப்ரமணியருக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இந்த நிலையில் கந்த சஷ்டி திருவிழாவின் 8 வது நாளான இன்று  சுப்பிரமணியர் தங்கமயில் வாகனத்திலும் தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வருகிறார்.  
 
இன்னும் மூன்று நாட்கள் இந்த திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பல முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்