திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம் செய்ய 30 மணி காத்திருக்கும் பக்தர்கள்

Webdunia
திங்கள், 1 மே 2023 (23:32 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களின் காத்திருப்பு நேரம் 30 மணி நேரமாக அதிகரித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவிலுள்ள பிரசித்தி பெற்ற கோவிலாகும். தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் திருப்பதி    ஏழுமலையான் கோவிலில் அதிகரித்துள்ளது.

சாமி தரிசனம் செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர். வைகுண்டம் கியூ காம்பிளக்ஸ்ஸில் எல்லா அறைகளும் நிரம்பியது. எனவே 1 கிமீ வரை ப்கதர்கள் தரிசனத்திற்காக காத்திருந்த்னர்.

சிறிய குழந்தைகளுடன் காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவசமாக குடி நீர், மோர், பால், ஆகிய உணவுப் பொருட்கள் வழங்கப்படும் நிலையில், தாய்மார்கள் மற்றும் முதியவர்களுக்கு விரைவில் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், இலவச தரிசனம் டோக்கன் இல்லாமல் ஏழுமலையானை தரினம் செய்ய சுமார் 30 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

 நேற்று கோவிலில் 82,582 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்