ஆந்திர முதல்வரின் சகோதரியை கைது செய்த தெலுங்கானா காவல்துறை!

திங்கள், 24 ஏப்ரல் 2023 (21:23 IST)
ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா என்பவரை தெலுங்கானா மாநில போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கானாவில் அரசு பணியாளர் தேர்வாணைய வினாத்தாள் முன்கூடிய கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தை முற்றுகை இடுவதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா வீட்டில் இருந்து காரில் ஏறுவதற்கு முயன்றார்.
 
அப்போது அவரை தடுத்த தெலுங்கானா மாநில போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஷர்மிளா போலீசாரை தாக்கியதாகவும் அவரை பெண் போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
போலீசாரை ஷர்மிளா தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்