நாளை ஆவணி அவிட்டம்! பூணூல் அணிய சிறந்த நேரம் எது?

Prasanth Karthick
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (16:29 IST)

நாளை ஆவணி அவிட்டம் கொண்டாடப்படும் நிலையில் பூணூல் மாற்ற சிறந்த நேரம் எது என்பது குறித்து பார்க்கலாம்.

 

 

ஆவணி மாதத்தில் பௌர்ணமி நாளில் அவிட்ட நட்சத்திரம் இணைந்து வரும் நாள் ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளே வேதங்கள் அவதரித்த நாளாக கூறப்படுகிறது. இந்த நாளில்தான் மகாவிஷ்ணு ஹயக்ரீவ அவதாரம் எடுத்து அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்டார்.

 

ஆவணி அவிட்ட நாளில் பிராமண குலத்தவர்கள், ஆசாரிகள் விடியற்காலையிலேயே குளித்து மந்திரம் சொல்லி புது பூணூலை அணிவது வழக்கம். 

 

இந்த ஆண்டு ஆவணி அவிட்டமான நாளை அதிகாலை 3 மணியிலிருந்து மறுநாளை அதிகாலை 1 மணி வரை பௌர்ணமி திதி உள்ளது. ஆனால் அவிட்ட நட்சத்திரமானது நாளை காலை 09.09 மணிக்கு தொடங்கி மறுநாள் 7.50 வரை இருக்கும். காலை 12 மணி முதல் 1 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் அந்த சமயத்தில் பூணூல் மாற்றிக் கொள்ளலாம். அல்லது ப்ரம்ம முஹூர்த்த வேளையிலே பூணூல் மாற்றுவதும் சிறந்த நேரமாகும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்