சருமத்திற்கு அடர்த்தியான குளியல் சோப் பயன்படுத்தாமல், மென்மையான சோப் பயன்படுத்திக் குளிப்பது நல்லது.
குளித்தவுடன் சருமத்தை அழுத்தித் துடைக்காமல், பருத்தியால் தயாரிக்கப்பட்ட துண்டைக்கொண்டு மென்மையாக ஒற்றி எடுக்க வேண்டும்.
குளித்து முடித்தவுடன் சருமத்தில் மாஸ்சுரைசர் பூசுவதன் மூலம் சரும வறட்சியைத் தடுக்கலாம்.
மாஸ்சுரைசரை லோஷன் வடிவத்தில் இல்லாமல், கிரீம் மற்றும் ஆயின்மென்ட் வடிவத்தில் வாங்குவது நல்லது. மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.