பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது. வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும். பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.
* சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கலவையாக தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம்.
* கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும். சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
* கஸ்தூரி மஞ்சள்தூள் ,சிறுபயறுத்தூள் இரண்டையும் சம அளவு கலந்து,தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கி காலை, இரவு என 2 முறை முகத்தில் தேய்த்து 1/2 மணிநேரம் கழித்து கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வரவும். முடி கொட்டிவிடும்.