சருமத்தினை ஈரத்தன்மையுடன் வைத்திருக்க உதவும் கற்றாழை !!

கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தின் தீய  விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.

சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும்.
 
வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டி ஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும். 
 
கற்றாழையின் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும். முகத்துக்கு பூசும் கிரீம்கள், நகத்துக்கு பூசும் நகப்பூச்சு பொன்றவை இந்த கற்றாழையில் இருந்துதான் பெறப்படுகிறது. 
 
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சருமநோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர  நல்ல குணம் கிடைக்கும். சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன.
 
வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை  மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற  வைத்து, கழுவி பின் மேக்கப் போட்டால், நன்றாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்