சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க உதவும் கடுகு எண்ணெய் !!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:01 IST)
தினமும் காலையில் குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடம் முன்பும், இரவில் தூங்குவதற்கு முன்பும் உதட்டில் கடுகு எண்ணெய்யை தடவி வந்தால், உதடுகளின் கருமை நிறம் மாறுவதோடு, மென்மையாகவும் மாறிவிடும்.


கடுகு எண்ணெய் சருமத்துக்கு இயற்கையான சன் ஸ்கிரீனாகப் பயன்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை மெருகூட்டுவதோடு, முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும் நீக்கும். கடுகு எண்ணெய்யையும், தேங்காய் எண்ணெய்யையும் சம அளவில் கலந்து, உடல் மற்றும் முகத்தில் தடவி விட்டு, நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் சருமம் மென்மையாகவும் பளபளப்புடனும் இருக்கும்.

கடுகு எண்ணெய்யை சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்த்து வர, தலைமுடி நீண்டு அடர்த்தியாக வளரும். தலைமுடிக்கும் சருமத்துக்கும் மட்டுமல்லாமல் பற்களையும் பளிச்சென சுத்தமாக வைத்திருக்கவும் கடுகு எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். கடுகு எண்ணெய்யைத் தொடர்ந்து தலைமுடிக்கு தேய்த்து வந்தால் இளநரையை ஏற்படாது, மேலும் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்தும்.

சருமத்தை இயற்கையான முறையில் சுத்தம் செய்யும் ஒரு கிளன்சராக கடுகு எண்ணெய் பயன்படுகிறது. கடுகு எண்ணெய்யை இரவு தூங்கும் போது தலையி்ல் தேய்த்து, வரவேண்டும். கடுகு எண்ணெய்யானது தலைமுடியின் வேர்க்கால்களுக்குள் சென்று, முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்