கருமை நிறம் நீங்கி வெண்மை நிறத்தை பெறவேண்டுமா....?

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (19:44 IST)
தக்காளி சாருடன் 1 ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கருமை நீங்கி வெண்மை நிறம் வெளிப்படும்.


2 தேக்கரண்டி பால் பவுடர் மற்றும் 1 தேக்கரண்டி ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். பால் பவுடர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மற்றும் சருமத்தின் மென்மையை மேம்படுத்த மிகவும் நல்ல பொருள். பால் பவுடரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்திற்கு பொலிவைத் தரும்.

பாதாம் பருப்பை நன்கு அரைத்து சிறிதளவு தேன்,எலுமிச்சை சாறு கலந்து தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சிடும்.

இரவு தூங்க செல்லும் முன்பு விட்டமின் இ மாத்திரையில் இருந்து சிறிது எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து விட்டு காலையில் எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால் முகம் பளிச் என காணப்படும்.

தக்காளி சாறு, தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு தலா 1 தேக்கரண்டி எடுத்து நன்கு ஒருசேர கலந்து கருப்பாக இருக்கும் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டுமின்றி, கை கால்களிலும் தடவலாம். 15 நிமிடம் நன்கு ஊறவைக்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தேன் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது.

வெள்ளரிக்காயில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளது. எனவே, இரவு தூங்க செல்லும் முன்பு வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி விடவும். பின்பு காலை, எழுந்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம்  பொழிவுடன் காணப்படும்.

பாதாம் எண்ணெய்யிலும் ஈரப்பதம் உள்ளது. எனவே, இதனையும் இரவு முகத்திற்கு தடவி மசாஜ் செய்து காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரலாம்.

பப்பாளி முகத்திற்கு குளிர்ச்சியை கொடுக்கும்.பப்பாளி துண்டுகளை நன்கு மசித்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகம் பளிச்சிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்