வறண்ட சருமத்தை பொலிவு பெறச்செய்யும் வாழைப்பழத்தோல் !!

Webdunia
வாழைப்பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை குடித்து வந்தால் சரும பிரச்சனைகள் நீங்கி தேகம் பொலிவடையும்.

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதனால் தேக ஆரோக்கியம் பெறுவதுடன் செரிமான கோளாறுகளும் சரியாகும். ஆனால் வாழைப்பழத்தை விட அதன் தோலில் அதிக நன்மைகள் உள்ளது.
 
குளிர்காலத்தில் நிறைய பேருக்கு சருமம் வறண்டு போகக்கூடும். இப்படி வறண்ட பகுதிகள் உள்ள இடத்தில் வாழைப்பழத்தின் தோலை வைத்து தினமும் தேய்த்து  வர வறண்ட சருமம் விரைவில் மறைந்து சருமம் பொலிவுறும்.
 
வாழைப்பழத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர மன அழுத்தம் குறையும். வாழைப்பழத்தோல் கண்களுக்கு குளிர்ச்சியை  தரும். அதனால் இந்த வாழைப்பழத் தோலை கண்களின் மீது வைத்திருப்பதால் கண்களை குளிர்ச்சியாக்கலாம்.
 
மூட்டை பூச்சிகள் போன்ற பூச்சிகள் கடித்து விட்டால் அந்த இடத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும். அதை தடுக்க வாழைப்பழத்தின் தோலை வைத்து  அந்த இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும்.
 
முகத்தில் பருக்கள் உள்ள இடத்தின் மீது மிருதுவாக வாழைப்பழத்தின் தோலை வைத்து தேய்த்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்