தினமும் ஒரு கப் பசலைக் கீரை சாப்பிட்டால் என்ன பயன்?

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (00:35 IST)
பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது. வீட்டுப்பந்தல்களில் கீரைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கிறார்கள்.
 
பசலைக் கீரையில் வளமான அளவில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.
 
முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
பசலைக்கீரையில் வைட்ட மின் 'ஏ',  `கே',  மற்றும் `ஈ', அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகளான சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
 
தினமும் ஒரு கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில்  நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
 
பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனி மச்சத்துக்கள், சருமத்தில் எண்ணெய் பசையைத் தக்க வைத்து, சரும வறட்சியில் இருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமின்றி, இது சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் சுருக்கங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.
 
ஒரு கப் வேக வைத்த பசலைக்கீரையில் வைட்டமின் `கே வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியே கால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்