இன்று உலக நீரிழிவு தினம்: நீரிழிவு என்பது ஒரு நோயா?

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (19:07 IST)
இன்று உலகம் முழுவதும் உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகிலுள்ள பலருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று கூறப்பட்டாலும் நீரிழிவு என்பது ஒரு நோய் கிடையாது என்றும் அது ஒரு குறைபாடு மட்டுமே என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
நீரிழிவு நோய் பெரும்பாலும் மன பயத்தினால் தான் வருகிறது என்றும் நீரிழிவு நோய் வந்தவர்கள் அதை தைரியத்துடன் எதிர்கொண்டால் மிக எளிதில் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதியை உலக நீரிழிவு தடுப்பு தினமாக ஐநா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நீரிழிவு என்பது 90 சதவீத மக்களுக்கு வருவதாக கூறப்படும் நிலையில் நீரிழிவு நோய் வந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்தால் இந்த நோயிலிருந்து மிக எளிதில் தப்பித்துவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
 
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் நீரிழிவு நோயை தகுந்த சிகிச்சை அளிக்காமல் கவனிக்காமல் விட்டால் உடலில் உள்ள மற்ற உறுப்புகளையும் அது பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்