பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

Mahendran
செவ்வாய், 5 நவம்பர் 2024 (18:59 IST)
பன்னீர் ரோஜா  இந்திய மருத்துவத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கிய மருத்துவ குணங்கள் உள்ள நிலையில் அவை பற்றி தற்போது பார்ப்போம்.
 
பன்னீர் ரோஜா மலச்சிக்கலை தீர்க்கிறது. இதன் மொட்டுகளை அரைத்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
 
பன்னீர் ரோஜா சருமத்துக்கு நல்ல பொலிவு மற்றும் மென்மை அளிக்கிறது. இதன் பூக்களை எடுத்து அதைப் பசும்பாலில் கலந்து முகத்தில் பூசினால் சருமம் பளபளப்பாக மாறும்.
 
பன்னீர் ரோஜா அஜீரணத்தைச் சரிசெய்யும் தன்மை கொண்டது. பன்னீர் ரோஜா சாறு அல்லது கசாயம் குடிப்பதன் மூலம் பித்தம் மற்றும் உடலில் சூட்டை குறைக்க முடியும்.
 
 பன்னீர் ரோஜாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இளமையை  இருக்க உதவியாக இருக்கும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்