பழங்களை கொண்டு முகத்தை அழகாக்கும் இயற்கை குறிப்புகள் !!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (23:33 IST)
முகத்தை அழகாக பராமரிக்க, முகத்திற்கு அந்த காலத்திற்கு ஏற்ற பராமரிப்பானது தேவைப்படுகிறது. அத்தகைய பராமரிப்பிற்கு பழங்கள் ஒரு நல்ல பலனைத்  தருகிறது.
 
பப்பாளி ஸ்கரப்: பப்பாளிப் பழத்தில் இருக்கும் பாபெயின் என்னும் நொதிப்பொருள், சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தையும்  மென்மையாக்கும். மேலும் அதில் செய்யப்படும் ஃபேசியல் ஸ்கரப் தோலின் துளைகளில் இருக்கும் அழுக்கு, தூசிகளை நீக்குவதோடு, சருமடத்தில் அதிகப்படியான  எண்ணெய் பசை இல்லாமலும் பார்த்துக் கொள்ளும்.
 
ஆரஞ்சு ஸ்கரப்: பாதி ஆரஞ்சு பழச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளை நீக்கிவிடுங்கள். 4 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தேங்காய்  எண்ணெய் கலந்து ஸ்கரப் தயாரிக்கவும். வாரத்தில் 3 நாட்கள், இதை வைத்து ஸ்கரப் செய்யலாம்.
 
மாம்பழ ஸ்கரப்: ஒரு டேபிள் ஸ்பூன் மாம்பழ ப்யூரி, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை, அரை டீஸ்பூன் பால் இவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை  நன்றாக கழுவிய பிறகு, ஈரத்தைத் துடைத்த பின் இதை முகத்தில் பூசி, தேய்க்கவும். கழுத்து, உதடு, கை, கால்களில் கூட ஸ்கரப் செய்யலாம். குளிப்பதற்கு முன்,  உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம்.
 
ஆரஞ்சு தோல் மாஸ்க்: 2 டேபிள் ஸ்பூன் கெட்டி தயிர், 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி இவற்றை பேஸ்டாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து  கழுவி விடவும்.
 
இயற்கை ஸ்கரப்: பாசி பயறை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை எடுத்து முகத்தில் ஸ்கரப் செய்யுங்கள். உலர்ந்த சருமம் இருப்பவர்கள் வாரம் ஒருமுறை செய்யலாம். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் வாரத்தில் 3 முறை செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்